இந்த வாரம் சார்ட்டினைப் பார்க்கும்பொழுது ஏற்ற இறக்கங்கள் ஒரே சேனலில் பயணிப்பது தெளிவாகத் தெரியும்.
இது போன்ற பயணங்கள்தான் பணம் பண்ண எளிதான தருணங்கள்.அது சப்போர்ட் லைனைத் தொடும்போது வாங்குவதும்,ரெசிஸ்டன்ஸ் லைனைத் தொடும் பொழுது ப்ராஃபிட் புக் செய்வதும் பின்பு அங்கிருந்து விற்று வைப்பதும் என பல வாய்ப்புகளை நமக்கு வழங்கும்.கடந்த இரண்டு வாரமாக நமது டார்கெட்டுகள் அனைத்தும் உடைபடாமல் ரீச ஆனது இந்த சேனலின் பயணத்தால்தான்.எவ்வளவு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் EUROஓர் UPTREND லியே பயணம் செய்கிறது.இது கடல் அலைகள் அடுத்தடுத்து சராசரியாக கரைக்கு வருவதும் திரும்புவதும் போலதான்.இதனை எலியட்ஸ் வேவ் தியரி என்பார்கள்.பார்க்க அமைதியான அலைகளின் பயணங்கள் போலத் தெரிந்தாலும் மூச்சடக்கி முத்துக் குளிக்க வேண்டுமானால் சில கணக்குகளைப் போட்டு ஆழம் அறிந்து காலை விட்டால்தான் கரைக்குத் திரும்ப முடியும்.இந்த வாரமும் சேனலிலேயே செல்லுமானால் நமது டார்கெட்டுகளும் எளிதாக ஹிட் ஆகும். சரி சேனல் உடைபட்டால்,அதுதான் விற்று வாங்கும் வாய்ப்பிருக்கிறதே.அலையோடு சேர்ந்து நீங்களும் அதன் திசையில் பயணியுங்கள்.அது உங்களைக் கரைக்கு கொண்டு வந்து விடும்.கோல்டன் ரூல்ஸை மட்டும் சரியாக ஃபாலோ பண்ணுங்கள்.வாழ்த்துக்கள்.வரும் வாரத்திற்கான வழிப் பயணம் இதோ
EUR/USD
BUY ABOVE : 1.316 T1- 1.322, T2- 1.328 SL- 1.308
SELL BELOW : 1.303 T1- 1.297, T2-1.291 SL-1.310
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக