Pages

பங்குச் சந்தைப் பயிற்சிகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குச் சந்தைப் பயிற்சிகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூன், 2016

தங்கம்:2016ல் எப்படி இருக்கும்?கடந்த கால கணிப்புகளும் நடப்பதும்.

நாம் கடந்த பதிவுகளில் சொன்னபடியே இந்த வருடமும் தங்கம் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் ட்ரிக்ஸ் பிப்ரவரி மாதமே காட்டிவிட்டது.

கடந்த கால பதிவுகளைப் பார்க்க‌..


அதன்படி நமது ட்ரிக்ஸின் படி தங்க விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றது என்பதை இந்த வருட சார்ட்டின் மூலமும் நீங்கள் அறியலாம்.

ஜனவரி மாத கான்ட்ராக்டில் 26867 உயர்ந்த புள்ளியில் முடிந்த தங்க விலை பிப்ரவரி மாதம் அந்த புள்ளியினை உடைக்க ஆரம்பித்ததுமே நமது வர்த்தகத்தினை ஆரம்பித்திருந்து டீமேட்டிலோ அல்லது நகையாகவோ கூட தங்கத்தினை வாங்கி வைத்திருக்க ஆரம்பித்திருந்தவர்களுக்கு இன்றைய அதிக விலையான ரூ 31000ஐ தாண்டியிருக்கும்.

அதாவது ஒரு லாட்டிற்கு ரூ 4000 இலாபம் கிடைத்திருக்கும்.

அதே 10 கிராம் கட்டித் தங்கமாக வாங்கி வைத்திருந்தால் இன்று கிராமிற்கு ரூ 400 அதாவது 10 கிராமிற்கு ரூ 4000 இலாபம் கிடைத்திருக்கும்.

டிமேட்டில் வாங்கும் போது எந்த செய்கூலி சேதாரம் என்ற கழிவும் இல்லை.

3% to 5% வரை ப்ரோக்கரேஜ் மட்டுமே கழியும்.

100 கிராம் தங்கத்தினை ஆன்லைனில் ரூ 2,68,670 க்கு வாங்கி வைத்திருந்தால் இந்த 5 மாதத்தில் இன்று அதனை ரூ 3,10,000க்கும் மேல் விற்று சுமார் ரூ 40000 இலாபம் பார்த்திருக்கலாம்.

இதனையேதான் மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்களும் செய்கின்றன.

ஆக நாம் கொடுக்கும் டெக்னிக்கல் அனாலிசிஸ் 80% எல்லா வகையான வர்த்தகத்திலும் வெற்றி பெற்று வருகின்றது என்பதற்கு இது மீண்டும் ஓர் ஆதாரமாகும்.
 

சனி, 23 ஜனவரி, 2016

புத்தாண்டில் சரிந்த பங்குச் சந்தை.அடுத்தது என்ன?

NIFTY CHART JAN 2016

2016ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவை சந்தித்து வருகிறது.

ஆகையால் தான் நாம் இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடுத்த BHARTI AIRTEL பங்கானது சந்தையுடன் சரிந்ததும் நாம் நஷ்டத்துடன் வெளியேறி அடுத்த வாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து பரிந்துரைகள் கொடுக்கவில்லை,

காரணம் இது ஒரு குறுகிய கால முதலீட்டு வர்த்தகம் ஆகும்.

இதில் வாங்கி விற்கும் நிலை ஒன்றினையே நாம் மேற்கொள்ள முடியும்.(LONG)

தினசரி வர்த்தகம்,கமாடிட்டி,ஃபாரெக்ஸில் மேற்கொள்வது போன்ற  விற்று வாங்கும் எதிர்மறை வர்த்தகத்தினை நாம் மேற்கொள்ள இயலாது.(SHORT TRADING)

எனவே ஆண்டு முழுவதும் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.

பங்குச் சந்தை சரியும் என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் தெளிவாகக் காட்டிவிட்டதால் நாம் சுதாரித்துக் கொண்டோம்.

இதே வர்த்தகத்தினை தினசரி வணிகர்கள் மேற்கொண்டிருந்தால் அதீத இலாபத்தினை சம்பாதித்திருக்கலாம்.

ஏனெனில் டெக்னிக்கல் அனாலிசிஸில் காட்டியுள்ள படி சார்ட்டில் ஒரு HEAD & SHOULDER தோற்றம் உருவாகியுள்ளது,

பங்குச் சந்தையில் இந்த தோற்றம் மிக அதிக அளவில் அனைவரும் கணிக்கக் கூடிய பலன்களைத் தரக் கூடியது,


அதன்படி NIFTY யானது கீழ்நோக்கி ப்ரேக் அவுட் ஆனதும் தினசரி வணிகர்கள் ஃப்யுச்சரில் விற்று வைத்திருப்பார்கள்.

இதன் விதிப்படி சந்தையானது ப்ரேக் அவுட் பாயிண்டிற்கும்(7750) தலைக்கும் (HEAD) (8250)இடையேயான உயரமான சுமார் 500 பாயிண்ட் கீழே செல்ல வாய்ப்பு ஏற்படும்.(7750-500=7250).

மேல் நோக்கிய நஷ்டத்தடுப்பாக SHOULDER 2ஐ (8000PTS) மனதில் வைத்துக் கொள்ளலாம்.

அதன்படி ப்ரேக் அவுட் பாயிண்டினை உடைத்து சந்தையானது வாரத்தின் அதிக பட்ச LOW வான 7241 ஐ அடைந்துள்ளதைப் படத்தில் பார்க்கலாம். (NIFTY CHART JAN 2016)

BHARTI AIRTEL JAN 2016

அடுத்தது என்ன?

சந்தை இன்னும் காளையின் பாதைக்குத் திரும்பும் அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு இல்லை.

எனவேதான் இன்னும் சந்தை மேல்நோக்கித் திரும்பி அடுத்த அறிகுறிகளைக் காட்டும் வரை நாம் ஆமை வேகத்தில்தான் செல்ல வேண்டும்.

ஏதாவது ஒரு வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதற்காக வாங்கி விற்றுக் கொண்டிருந்தோமானால் நஷ்டத்தினையே மேலும் மேலும் சந்திக்க நேரிடும்.

நாம் குறிப்பட்ட படியே BHARTI AIRTEL  பங்கின் நஷ்டத் தடுப்பான 323ல் வெளியேறாமல் கையில் வைத்துக் கொண்டே இருந்தால் பங்கானது மேலும் 35 பாயிண்ட்ஸ் நஷ்டத்தினை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்.(See @BHARTI AIRTEL JAN 2016)


எனவே டெக்னிக்கல் அனாலிசிஸின் படி சாமர்த்தியமாகச் செயல்பட கற்றுக் கொள்ளுங்கள்.

பங்குச் சந்தையானாலும் சரி,ஃபாரெக்ஸாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்டத்திலும் இந்த டெக்னிக்கல் அனாலிசிஸ் ஒன்றே உங்கள் முதலீட்டினைக் காப்பாற்றும்.

நம்மால் மீன் பிடிக்க மட்டும்தான் கற்றுக் கொடுக்க முடியும்.

மீன்களைப் பிடிப்பது உங்கள் வேலை.

இதற்கான அனைத்து பயிற்சி வீடியோக்களும் நமது DIAMOND CORNER ல் கொடுக்கப்பட்டுள்ளது.

திங்கள், 4 ஜனவரி, 2016

தங்கம்:2016ல் எப்படி இருக்கும்?கடந்த காலமும் கணிப்புகளும்.

நமது தளத்தில் DIAMOND CORNER என்ற பகுதியில் பங்குச் சந்தைப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.

பங்குச் சந்தையில் ட்ரேடிங் செய்பவர்களுக்கும்,ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தப் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு கடந்த கால நமது கணிப்புகளும் அவற்றின் வெற்றிகளுமே ஆதாரங்கள்.

அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 19ல் "தங்கத்தினைப் பற்றிய ஓர் அதிர்ச்சிப் பதிவு" என்ற தலைப்பில் ஒரு சின்ன டெக்னிக் கொடுத்திருந்தோம்.

பதிவினைக் காண இங்கு செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2013/04/blog-post_19.html

இந்த டெக்னிக்கின் படி ஒவ்வொரு வருடமும் தங்கம் எந்தப் பாதையில் செல்லும் என்பதை ஜனவரி மாதமே தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லியிருந்தோம்.

அதன்படியே கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தங்கம் இறங்குமுகத்தில் செல்ல நாம் கொடுத்த டெக்னிக் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாக இருந்தது என்பதைப் பாருங்கள்.

அப்போது நாம் சொல்வதைக் கேட்க ஆளில்லை.

எனவேதான் பங்குச் சந்தைப் பதிவுகளில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் இப்போது நமது தளத்திற்கு தினம் 100 வாசகர்கள் வந்து போவதால் மீண்டும் இது போன்ற பயனுள்ள பதிவுகளையும்,பகுதிகளையும் ஆரம்பித்துள்ளோம்.


நாம் சொல்லிய டெக்னிக்கின்படி தங்கமானது 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் LOW/வினை (28625)உடைத்து கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்து பிறகு ஒரே இறங்குமுகமாகவே சென்றுள்ளது.அது கடைசி வரை நாம் சொன்ன நஷ்டத்தடுப்பான ஜனவரி மாத HIGH/யான 31468ஐ திரும்ப உடைக்கவேஇல்லை.

ஏப்ரல் 2014லிலேயே அது LOW வினை உடைத்து கீழிறங்கத் தொடங்கிவிட்டது.

அந்த நேரத்திலேயே தங்கத்தினை ஃப்யூச்சரில் விற்று வைத்து தொடர்ந்தவர்கள் இன்று வரை இலாபம் பார்த்திருக்கலாம்.

அல்லது அடகு வைத்த நகையினை விற்று கடன்களை அடைத்திருந்தால் இன்று அதற்கு கட்டி வந்த வட்டியும் மிச்சமாகியிருக்கும்.கடனும் அடைப்பட்டிருக்கும்.

சென்டிமென்ட்டாக ஏறும் ஏறும் என வாங்கி வைத்தவர்களுக்கு நிகர நஷ்டம்தான்.

இதுதான் 2015 ஜனவரி மாத சார்ட்டிலும் நடந்துள்ளது.

2015லும் ஜனவரி மாத LOW/யினை 26351 ஐ உடைத்த கரடியானது கடைசி வரை காளையினை எழும்ப விடவேயில்லை.அதாவது 2015 ஜனவரி மாத HIGH /யினை உடைக்கவே இல்லை.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நாம் சொன்ன உளவியல்படி நடந்திருந்தாலும் இது இப்படித்தான் நடக்க வாய்ப்புள்ளது என்பதை 2013 செப்டம்பர் மாத BEAR BAR/ஆனது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவித்திருப்பதனை படத்தில் காணலாம்.

அதாவது 2013 செப்டம்பர் மாத LOW/ஐ உடைத்து கரடியின் கை ஓங்க ஆரம்பிக்கும் போதே அந்த மாத HIGH/க்கும்(34450) LOW/(29277)விற்கும் இடைப்பட்ட உயரமான(வித்தியாசமான) சுமார் 5000 பாயிண்டுகள் அளவிற்கு அது அந்த மாத 29377/வான LOW/லிருந்து இறங்க ஆரம்பிக்கும் போது அதே 5000 பாயிண்டுகள் வரை கீழிறங்க வாய்ப்புள்ளது என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் காட்டிவிடுகிறது.

அதன்படியே அது 5000 பாயிண்ட்கள் குறைவாக ஜீலை 2015ல் 24450ஐ தொட்டு வந்துள்ளது.(H-34450-L-29300=5150-29300=24150)

இதுதான் நாம் சொல்லும் டெக்னிக்கும் டெக்னிக்கல் அனாலிஸிஸ்ம் ஆகும்.

இதே முறையில் 2016ல் தங்கம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நாம் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அதாவது இந்த ஜனவரி மாத HIGH/LOWவினையும் அது எப்போது கடக்கப்படுகிறது என்பதையும் பொறுத்து இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் கணித்தே இந்த வருடத்தின் இறுதிப் போக்கினைத் தீர்மானிக்க முடியும்.

அது வரை நமது பங்குச் சந்தைப் பயிற்சிகளைப் பெற்று நீங்களும் கணிக்கத் தொடங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.

புரியாதவர்கள் உங்கள் பங்குச் சந்தை அலுவலக நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க நமது தளத்தின் சொந்தப் பதிவாகும்.

எங்கிருந்தும் COPY /PASTE செய்யப்படவில்லை.அதே போல இந்தப் பதிவினையும் COPY /PASTE/செய்ய யாருக்கு உரிமையில்லை.

வியாழன், 17 டிசம்பர், 2015

ஆல் இன் ஆல்: பங்குச் சந்தைப் பயிற்சிகள் ஆரம்பம்.(விரைவில்)

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஆரம்பத்தில் பங்குச் சந்தையின் அடிப்படையிலேயே வலைப்பூவாக 2009ல் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் ஜாப் தளமாக உருவெடுத்து நிற்கிறது.

2009லேயே பங்குச் சந்தையினை அடிப்படையாக வைத்து நாம் கணித்த கணிப்புகள் 80% சரியாக இலக்கினை நெருங்கி வந்ததை  நமது தளத்தின் பிரபலமான TORTOISE PORTFOLOமூலம் அறியலாம்.

பழைய பதிவுகளைப் பார்க்க..


விரைவில் ஆன் லைன் ஜாப்பின் மற்றுமொரு அங்கமாக 2016ஆம் ஆண்டு முதல் பங்குச் சந்தை வர்த்தகம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வும்,தொழில் நுட்ப வீடியோக்களும் நமது கோல்டன் கார்னரில் அப்லோட் செய்ய ஆலோசனை செய்து வருகிறோம்.இன்று பல பட்டாதாரிகள் நம்முடன் ஆன்லைன் ஜாப்பில் நிலைத்து விட்டனர்.அவர்களுக்கு பங்குச் சந்தை பயிற்சியும் ஆன்லைனில் மேலும் பணமீட்ட ஓர் ஆயுதமாக இருக்கும் என நம்புகிறோம்.


எனினும் நமது பிரதானப் பயிற்சி ஆன்லைன் ஜாப்ஸ் சம்பந்தமாகவே இருக்கும் என்பதால் பங்குச் சந்தையில் கணக்கு தொடங்குவது போன்ற வெளிப்புற ப‌யிற்சிகளை நீங்கள் கணக்குகள் ஆரம்பிக்கும் அலுவலகத்தில் கற்று தெளிவடைந்து கொள்ளலாம்.அது போல ஓவ்வொரு அரசியல் நிகழ்விற்கும் கதை எழுதிக் கொண்டிருக்க மாட்டோம். நமது முக்கியப் பயிற்சி டெக்னிக்கல் அனாலிசிஸ் அதாவது எந்த விலைக்கு வாங்கி விற்று  வெளியேற வேண்டும் என்பதாகும்.


இதன் அடிப்படையே "ஓடுகின்ற நாய்க்கு ஒரு அடி முன்னால் கல்லை எறிய வேண்டும்" என்பதுதான்.பங்கு விலையினை கணித்து அதில் பணத்தினை ஈட்டக் கற்றுக் கொடுப்பதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ். இந்த யுக்திகள் பங்குச் சந்தைக்கு மட்டுமல்லாது ஃபாரெக்ஸ்,கமாடிட்டி என அனைத்து ஆன்லைன் வணிகங்களுக்கும் பொதுவாக இருக்கும்.

இதற்கு நமது மெம்பர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதை அறியும் வண்ணம் கீழேயுள்ள Linkல் வாக்கெடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=10&t=323&p=882#p882

இதில் அனைத்து மெம்பர்களும் தங்கள் வாக்குகளைப்  டிசம்பர் 31க்குள் பதியலாம்.அதனைப் பொறுத்தே அதாவது உறுப்பினர்களின் ஆர்வத்தினைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உங்கள் வாக்குகளைப் பதிவு செய்து பலரும் பலனடையச் செய்யுங்கள்.