Pages

சனி, 11 மே, 2013

FOREX :கடந்த வார (06 MAY 13) ரிப்போர்ட் ஓர் அலசல்.



கடந்த வாரம் நாம் கொடுத்திருந்தபடியே காளையின் கைகள் அதே சேனலில் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தாலும் கரடியின் கை ஓங்கி ஈரோவினை கீழ் நோக்கி இழுத்து வந்துவிட்டது.நாம் வாங்கிய பிறகு 30 பைப்ஸ் மேல் நோக்கிச் சென்றாலும் நம் முதல் இலக்கினைத் தொடராமல் கீழ் நோக்கி வந்து நமது நஸ்ட தடுப்பான 1308 ஐ உடைத்து நமக்கு 80 பைப்ஸ் நஸ்டத்தினை ஏற்படுத்தியது.நாம்தான் சந்தையின் போக்கில் செல்ல வேண்டுமே தவிர சந்தை நம் போக்கில் வராது என்பதினை உணர்ந்திருப்பீர்கள்.ஆதலால் காளை கை கொடுக்கும் எனக் காத்திராமல் 1308 நஸ்டத் தடுப்பில் வெளியேறிவிட்டு நாம் கரடியின் பக்கம் தாவி நமது SELL BELOW லெவலில் 1303 விற்று வைத்து நமது கீழ் நோக்கிய முதல் இலக்கான 1297 ஐக் கடந்து அதிகபட்சமாக 1293 வரை சென்று நமக்கு 100 பைப்ஸ் இலாபத்தைக் கொடுத்து நஸ்டத்தினைச் சரி செய்து விட்டது.கடந்த வாரங்களில் நாம் வெற்றிகரமாகச் செயல்பட்டு கொள்ளை இலாபத்தில் இருந்தோம்.இந்த வாரம் நாம் நமது நஸ்டத்தினைச் சரி செய்து சிறிது இலாபத்தினையே கைகொள்ள முடிந்தது.மொத்தத்தில்GOLDEN RULES ஐ பின்பற்றுபவர்களுக்கு என்றும் இலாபமே.வாழ்த்துக்கள்.  

கடந்த வார கணிப்புகள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக