சனி, 18 ஏப்ரல், 2009

பங்குச் சந்தையில் வடிவேல்(!)ஒரு கற்பனை நகைச்சுவை.


பங்குச் சந்தை என்பது பலருக்கும் புரியாத புதிர்தான்.அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வருபவர்கள் அம்பானியாகவே இருந்தாலும் ஆறு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.அதுவும் புதிதாக வருபவர்கள் அனைவரும் முதலில் ஒரு காமெடியனாகத்தான் இருந்திருப்போம் என்பது ஓரளவிற்கு உண்மைதான். ‌‌பங்குச் சந்தை இருபதினாயிரம் புள்ளிகளைத் தாண்டிச் சென்றபோது உள்ளே நுழைந்த வடிவேல் தமது அனுபவத்தை மனைவியுடன் அழுதுகொண்டே பகிர்ந்து கொள்கிறார். (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

வ‌டிவேல் (அழுதுகொண்டே): நான் பாட்டுக்கு ப‌ப்பாளிப் ப‌ழம்,பலாப் பழம் வாங்க‌ மார்க்கெட்டுக்கு போய்கிட்டுருந்தேன். ஏதோ க‌டை த‌வ‌றி உள்ளே நுழைந்து விட்டேன். இதுவும் மார்க்கெட்தான் சார் என்று ”சாருக்கு சேரைப் போடுடா” என‌ இழுத்து காபி,டீ கொடுத்து ஓரு டீமேட் அக்கௌண்டை ஓப‌ன் ப‌ண்ணி விட்டார்க‌ள்.ச‌ரிடா..ஒரு மார்க்க‌மாத்தான் அலையுறாங்க‌ன்னு நானும் ஒரு ப‌த்தாயிர‌ம் ரூபாய்க்கு வாங்கிப்போட்டேன். மார்க்கெட் ஒரு இருபத்தியொன்னாயிரம் வரைப் போச்சு.ஒரு ஐந்தாயிரம் லாபம் கிடைச்சுது.ஓடும் காளை என்றார்கள்,இந்தியா ஒளிர்கிறது என்றார்கள்.மார்க்கெட் முப்பதாயிரம்,நாப்பதாயிரம் என்றார்கள்.சரிடான்னு கூட ஒரு பத்தாயிரத்திற்கு வாங்கிப் போட்டேன். முதல்ல ஒரு 500,600 பாயிண்ட்தான் அடிச்சாங்க.பங்குச் சந்தையில‌ இதெல்லாம் சகஜம்ன்னாங்க.சரின்னு விட்டுட்டேன்.மறுபடியும் ஒரு ஆயிரம்,இரண்டாயிரம் பாயிண்ட் அடிச்சாங்க.அடிக்கும்போதே எங்க புரோக்கர் சொன்னார்.இது வெறும் ஃப்ராபிட் புக்கிங்தான்,மறுபடியும் சந்தை மேலே போகும்,வாங்கிப் போடுங்கன்னாரு.சரி ஃபீல்டுலேயே உள்ளவர் சொல்றாரே கரெக்ட்டாத்தான் இருக்கும்னு கூட ஒரு பத்தாயிரத்திற்கு வாங்கிப் போட்டேன்.அங்கயிருந்து மார்க்கெட்டை ஒரு 15000 பாயிண்ட் வரை கொண்டு வந்து அடிச்சாங்க. சரி அடிச்சுட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.

மனைவி : விட்டுட்டீங்களா ஏன்?


வ‌டிவேல் (அழுதுகொண்டே) : ஷ்ஷுப்பா.. இப்பவே கண்ணைக் கெட்டுதே…. இனி எல்லாம் ஜெயம்தான்னு சொன்னாங்க. அப்புறம் ஒரு பத்தாயிரத்திற்கு வாங்கிப் போட்டேன்.அப்புறம் அங்கயிருந்து ஒரு 1000,2000 இல்ல ஒரு 5000 பாயிண்ட் அடிச்சாங்க.மார்க்கெட் பத்தாயிரம் வந்து விட்டது.இது முதலீட்டுக்கு ஏற்ற தருணம் என்றார்கள். பில்டிங் வீக்காக இருந்தாலும் பரவாயில்லை,பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கான‌ பங்குகளாக வாங்கிப் போடுங்கன்னாங்க.இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்மள கவித்துடுவாங்ககளோன்னு பயம்தான் இருந்தாலும் சரின்னு,சத்யம் கம்ப்யூட்டர் பங்கு எல்லாம் ஒரு 200ரூ ரேஞ்சில ஒரு பத்தாயிரத்திற்கு வாங்கிப் போட்டேன்.‌ அடிச்சாங்க,அடிச்சாங்க,நாலே நாளுல‌ நாலு ரூபாய் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்க.மார்க்கெட்டையும் 8000த்துக்கு கொண்டு வந்து விட்டுட்டாங்க.சரி அடிச்சுட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.

மனைவி : இவ்வளவு அடிச்சுமா வாங்கிகிட்டேயிருந்தீங்க‌..


வ‌‌டிவேல்(அழுதுகொண்டே) : வாங்கிக்கிட்டுருக்கும்போதே ஒருத்தன் சொன்னான், எவ்வளவு அடிச்சு இறக்கினாலும் இவன் ஆவரேஜ் பண்ணிக்கிட்டேயிருக்கான் இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டாம்மா....‌

புதன், 15 ஏப்ரல், 2009

ஓடும் காளைக்கு ஒரு "ஓ" போடுவோம்.மூன்றே நாட்களில் 50% வருமானம் தந்த நமது டிப்ஸ்கள்


NAME,HIGH,LOW,DIFF,PROFIT/LOSS %BALAJI TELE,49.30,40.50,8.80,17.85
KFA 42.30,39.30,3.00,3.00
NEYVELI LIG,100.20, 90.60,9.60,9.58
WELSP GUJ 100.30, 86.80,13.50,13.46
Returns in % 47.98%

இந்த நான்கு டிப்ஸ்களுக்கும் நாம் டிப்ஸ் கொடுத்த பிறகு நமக்கு வாங்கி விற்க கிடைத்த வாய்ப்புகளை HIGH,LOW மூல்ம் குறிப்பிட்டுள்ளோம். கர‌டிச் சந்தையில் மூன்று மாதங்கள் எடுத்திற்கக்கூடிய கால அவகாசமானது மூன்றே நாட்களில் சாத்தியமானது நம் காளையால்தான்.ஆகவே ஓடும் காளைக்கு ஒரு "ஓ" போட்டுவிட்டு ஒர் ஓட்டையும் போட்டுவிட்டு போங்களேன்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

வரும் வாரத்திற்கான (06 ஏப்ரல் 09)பங்குச் சந்தை ‌டிப்ஸ்.


மார்ச் 19ற்கு நம் டிப்ஸின் ஸ்டாப் லாஸ் ஹிட் ஆகிவிட்டது.ஒரு நல்ல டிரேடர் 10 ல் 7 வணிகத்தை வெற்றிகரமாக முடிப்பார்.OK.இனி வரும் வாரத்திற்கான (06 ஏப்ரல் 09)பங்குச் சந்தை ‌டிப்ஸ்.

ESSAR OIL: Buy @ current level (Cl Rate on 02 Apr 09-Rs 80.75).

TGT Rs 100/- within 3 to 90 days.SL Rs 67/-. அல்லது Call Option வாங்கி வைக்கலாம்.