Pages

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO:தினசரி வர்த்தகப் பங்குப் பரிந்துரை.ஆரம்பம்

TORTOISE PORTFOLIO வினைத் தொடர்ந்து ஆன்லைன் ஜாப் மெம்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆன்லைன் ஜாப்பின் தினசரிப் பணிகளில் ஒன்றாக தினசரிப் பங்கு வர்த்தத்தினையும் (DAY TRADING)ட்ரெயில் பார்க்கும் விதமாக நமது மேஜிக் ட்ரிக்ஸின் அடிப்படையில் நாளை முதல் RABBIT PORTFOLIO வும் தொடங்கப்படுகிறது.

எந்த சார்ட்டும் இல்லாமல் எல்லாப் பங்குகளுக்கும் எளிதாக இலக்குகள் எடுக்கும் மேஜிக் ட்ரிக்ஸ் நமது தளத்தில் DIAMOND CORNER ல் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி சுமார் 70% இலக்குகள் வெற்றிபெற வாய்ப்பும்,30% தோல்வியடையவும் வாய்ப்புகள் உள்ளன.

பங்குச் சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதினை விட இந்த ட்ரிக்ஸ் மூலம் மனக் கணக்காகவே கால்குலேட் செய்து இழப்புகளைத் தவிர்க்கலாம்.

இந்த RABBIT PORTFOLIO மூலம் முழுக்க முழுக்க NSE யில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் தினசரி வர்த்தகம் புரிய எளிய முறையில் இலக்குகளும் நஷ்டத்தடுப்புகளும் கொடுக்கப்படும்.

தினம் காலை 10 மணிக்கு நமது தளத்தினைப் பார்வையிடலாம்.

தினசரிப் பங்குகளின் வாங்கும் விலை,விற்கும் விலை,நஷ்டத்தடுப்பு ஆகியவை கொடுக்கப்படும்.

புதிய மெம்பர்கள் கொஞ்ச நாட்கள் RABBIT PORTFOLIOவினை ஃபாலோ செய்து அதன் பிறகே ட்ரேடிங்கில் ஈடுபடவும்.

தின்சரி வர்த்தகத்திற்கு என்று வாங்கும் பங்குகளை இலாப இலக்குகள்,நஷ்டத்தடுப்பில் விற்று வெளியேறிவிடுங்கள்.

அதனை மறுநாள் டெலிவரிக்கு என எடுத்துச் செல்லாதீர்கள்.

கோல்டன் மெம்பர்களுக்கு வழக்கம் போல DIAMOND CORNER லும் இது விளக்கங்களுடன் வெளியிடப்படும்.

எல்லா நாட்களும் கட்டாயம் பரிந்துரை வரும் என எதிர்பார்க்க வேண்டாம்.

சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்து ஒன்று அல்லது  
2 பங்குகளுக்கு பரிந்துரை வெளியிடப்படும்.

கூடவே NIFTY யின் தினசரி வர்த்தக இலக்குகளும் வெளியிடப்படும்.

அதில் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எச்சரிக்கை;

பங்கு வர்த்தகம் என்பது முதலீட்டு அபாயத்திற்கு உட்பட்டது.இதனால் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நமது பரிந்துரைகள் பொறுப்பாகாது என்றும், பரிந்துரைக்கும் இந்தப் பங்குகளில்
நாமும் வர்த்தகம் செய்வோம் என எதிர்பார்க்க வேண்டாம் என்பதையும் புரிந்து செயல்படவும்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

TORTOISE PORTFOLIO: பங்குப் பரிந்துரை:DABUR



 DABUR (NSE)


https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/6/65/Dabur_Logo.svg/150px-Dabur_Logo.svg.png

 
BUY ABOVE:253
 (YOU MUST BUY ONLY ABOVE THIS RATE OR BELOW ONCE CROSSED 253 THEN AFTER)

TARGET 1- 259//   TARGET 2 -266

STOP LOSS- 245

TORTOISE PORTFOLIO SHARE HOLDING= 100



பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.



http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

TORTOISE PORTFOLIO : 20% இலாபம் கொடுத்த NDTV பங்கு

நாம் கணித்தபடியே NDTV பங்கு இன்றும் அதிகபட்ச விலையாக ரூ 113.40 ஐ நாம் பரிந்துரைத்த விலையான ரூ 75லிருந்து இலக்கினைத் தாண்டிச் சென்றுவிட்டது.

அதீத இலாபம் என்பதால் ஏற்கனவே கையிலிருந்த 1000 பங்குகளில் 800 பங்குகளை விற்று இதுவரை புக்கிங் செய்யப்பட்ட‌ மொத்த இலாபம் ரூ 1040.

இந்த இடத்தில் நாம் கையிலிருக்கும் 200 பங்குகளையும் சுமார் ரூ 99ல் விற்று அனைத்து இலாபத்தினைப் புக்கிங் செய்து கொண்டதாகக் கருதலாம்.

அந்த வகையில் பேப்பர் ட்ரேடிங் முறையில் இதுவரை புக்கிங் செய்யப்பட்ட‌ மொத்த இலாபம் ரூ 1040.

இன்று விற்ற 200 பங்குகள் மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ 480 ஆகும்.(Rs 99-Rs 75=Rs 24 x 20=Rs 480

மொத்தம் 1000 பங்குகளை விற்று இலாபத்தினப் புக் செய்துவிட்டதாக கணக்கில் கொண்டால் மொத்த இலாபம்.

ரூ 1040 + ரூ 480 = ரூ 1520 ஆகும்.

இது நாம் முதலீடு செய்த தொகையோடு (ரூ 7500.)ஓப்பிடும் போது சுமார் 20%இலாபம் ஆகும்.அதுவும் 5 நாட்களிலேயே கிடைத்ததால் நமது முதலீடு முடங்காமல் இருப்பதால் இதனை இரட்டை இலாபம் என்றே கருதலாம்..

மனிதனின் பயம்,பேராசை இரண்டும்தான் பங்குச் சந்தையினை வழி நடத்துகின்றன.அதில் பக்குவப்பட்டால் மட்டுமே பங்குச் சந்தையில் ஜெயிக்க முடியும்.

இது பேப்பர் ட்ரேடிங்க் என்றாலும் ரியல் ட்ரேடிங்கிலும் நீங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சரியான இலாப நஷ்டங்களில் ப‌ங்குகளை விற்று இலாபத்தினைக் கைக் கொள்ளவும்,நஷ்டத்தினை ஏற்று அது அதிகம் ஆகாமல் தடுக்கவும் பழகிக் கொண்டால் மட்டுமே பங்குச் சந்தையில் ஜெயிக்க முடியும்.


Attachment:

5JANNDTV.jpg [ 248.25 KiB | Viewed 1 time ]

முழு விவரங்களுக்கு  

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

TORTOISE PORTFOLIO :பங்குப் பரிந்துரை RESULT : NDTV

நாம் கணித்தபடியே NDTV பங்கு இன்று அதிகபட்ச விலையாக ரூ 89 ஐ நாம் பரிந்துரைத்த விலையான ரூ 75லிருந்து 2 நாளிலேயே முதல் இலக்கினைத் தாண்டிச் சென்றுவிட்டது.

அதீத இலாபம் என்பதால் இந்த இடத்தில் நாம் பாதி இலாபத்தினைப் புக்கிங் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் பேப்பர் ட்ரேடிங் முறையில் 500 பங்குகளுக்கு நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 700 ஆகும்.

இந்த 500 பங்குகளை விற்று இலாபத்தினைப் புக் செய்துவிட்டதாக கணக்கில் கொள்ளலாம்.

ப‌ங்கு இன்னும் கொஞ்சம் இறங்கி ஏறினால் அப்போது ஆவரேஜ் செய்யலாம்.

இல்லையெனில் அடுத்த இலக்கான ரூ 100க்கு அருகில் மீதமுள்ள 500 பங்குகளை  விற்கலாம்.

சனி, 30 ஜனவரி, 2016

TORTOISE PORTFOLIO : பாயத் தயாராகும் பங்குச் சந்தை.



 


பிப்ரவரி மாதம் பட்ஜெட் மாதம் என்பதால் பங்குகள் பலவும் ஜெட் வேகத்தில்தான் ஏறி இறங்கும்.எனவே எப்போதும் நஷ்டத் தடுப்பு என்னும் பாதுகாப்புக் கருவியுடன் வர்த்தகம் புரியுங்கள்.

இந்த வாரம் 7563ல் நிஃப்டி க்ளோஸ் ஆகியுள்ள நிலையினைப் பார்க்கும் போது

விரைவிலேயே மேல் நோக்கிச் சென்று 7700 என்ற பாயிண்ட்டினை நெருங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


ஃப்யூச்சர் மற்றும் பங்குகள் வாங்கி விற்பவர்கள் 7400 என்ற பாயிண்டினை மனதளவில் நஷ்டத்தடுப்பாக வைத்துக் கொண்டு வர்த்தகம் புரிந்து உடனுக்குடன் இலாபங்களை புக் செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த மாதம் நாம் பரிந்துரைக்கும் பங்கு NDTV ஆகும்.



சீக்கிரமே இந்தப் பங்கானாது இப்போதைய விலையான ரூ 75 லிருந்து ரூ 100ஐ நெருங்கும் வாய்ப்புகள் அதிகம்.

மனதளவில் (Trailing Stop loss) ரூ 65ஐ நஷ்டத் தடுப்பாகக் கொண்டு நீங்கள் வாங்கிய பிறகு ரூ 100 ஐ நோக்கிய பயணத்தில் நல்ல இலாபம் கிடைக்கும் போது விற்று வாங்கி தொடரலாம்.

உதாரணமாக 1000 பங்குகள் ரூ 7500க்கு வாங்குகிறீர்கள் என்றால் ரூ 85ல் 500 பங்குகளை விற்று இலாபத்தினைப் புக் செய்யலாம்.மீதி 500ஐ ரூ 97 அல்லது  98ல் விற்று வெளியேறலாம்.

இந்த வாரத்தில் ரூ 78ஐ கண்டிப்பாக நெருங்கும் வாய்ப்புகள் உள்ளது.

அப்போது கூட 200 பங்குகளை விற்று இலாபம் பார்க்கலாம்.கீழே வந்தால் மீண்டும் வாங்கி ஆவரேஜ் செய்யலாம்.

நஷ்டத்தடுப்பிலும் சுமார் ரூ 69க்கு கீழ் வரும் போது பாதியினையும் ரூ 63க்கு கீழ் வரும் போது பாதியினையும் விற்று நஷ்டத்தினைத் தவிர்க்கலாம்.

இதனையே நாம் ஒரு பேப்பர் ட்ரேடிங்காக வைத்து 1000 பங்குகளுக்கான இலாப நஷ்டத்தினை இனி வருங்காலங்களில் கணிப்போம்.