Pages

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

TORTOISE PORTFOLIO : 20% இலாபம் கொடுத்த NDTV பங்கு

நாம் கணித்தபடியே NDTV பங்கு இன்றும் அதிகபட்ச விலையாக ரூ 113.40 ஐ நாம் பரிந்துரைத்த விலையான ரூ 75லிருந்து இலக்கினைத் தாண்டிச் சென்றுவிட்டது.

அதீத இலாபம் என்பதால் ஏற்கனவே கையிலிருந்த 1000 பங்குகளில் 800 பங்குகளை விற்று இதுவரை புக்கிங் செய்யப்பட்ட‌ மொத்த இலாபம் ரூ 1040.

இந்த இடத்தில் நாம் கையிலிருக்கும் 200 பங்குகளையும் சுமார் ரூ 99ல் விற்று அனைத்து இலாபத்தினைப் புக்கிங் செய்து கொண்டதாகக் கருதலாம்.

அந்த வகையில் பேப்பர் ட்ரேடிங் முறையில் இதுவரை புக்கிங் செய்யப்பட்ட‌ மொத்த இலாபம் ரூ 1040.

இன்று விற்ற 200 பங்குகள் மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ 480 ஆகும்.(Rs 99-Rs 75=Rs 24 x 20=Rs 480

மொத்தம் 1000 பங்குகளை விற்று இலாபத்தினப் புக் செய்துவிட்டதாக கணக்கில் கொண்டால் மொத்த இலாபம்.

ரூ 1040 + ரூ 480 = ரூ 1520 ஆகும்.

இது நாம் முதலீடு செய்த தொகையோடு (ரூ 7500.)ஓப்பிடும் போது சுமார் 20%இலாபம் ஆகும்.அதுவும் 5 நாட்களிலேயே கிடைத்ததால் நமது முதலீடு முடங்காமல் இருப்பதால் இதனை இரட்டை இலாபம் என்றே கருதலாம்..

மனிதனின் பயம்,பேராசை இரண்டும்தான் பங்குச் சந்தையினை வழி நடத்துகின்றன.அதில் பக்குவப்பட்டால் மட்டுமே பங்குச் சந்தையில் ஜெயிக்க முடியும்.

இது பேப்பர் ட்ரேடிங்க் என்றாலும் ரியல் ட்ரேடிங்கிலும் நீங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சரியான இலாப நஷ்டங்களில் ப‌ங்குகளை விற்று இலாபத்தினைக் கைக் கொள்ளவும்,நஷ்டத்தினை ஏற்று அது அதிகம் ஆகாமல் தடுக்கவும் பழகிக் கொண்டால் மட்டுமே பங்குச் சந்தையில் ஜெயிக்க முடியும்.


Attachment:

5JANNDTV.jpg [ 248.25 KiB | Viewed 1 time ]

முழு விவரங்களுக்கு