Pages

செவ்வாய், 30 ஜூன், 2015

DIGITAL MARKETING:: ஓர் அறிமுகக் கட்டுரை

MARKETING என்றாலே சந்தைப்படுத்துதல் என்பது அனைவருக்கும் தெரிந்துதான்.

DIGITAL MARKETING என்றால் என்ன என்று கேட்டால் அதுவும் ஏதோ ஆன்லைன் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்துதல் என்பதும் உங்களுக்குள் ஃப்ளாஷ் ஆகியிருக்கும்.

சரி..இதனை எப்படிச் செய்கிறார்கள்?இதனால் யாருக்கு இலாபம்?இதற்கு என்ன தகுதி வேண்டும்?இதில் எவ்வளவு  முதலீடு வேண்டும்?எவ்வளவு சம்பாதிக்கலாம்? இதுதான் இங்குள்ள கேள்விகள்?


DIGITAL MARKETING என்றால் என்ன ?



நடைமுறை வாழ்க்கையில் பல நிறுவன ஏஜென்ட்களும் பல்வேறு விதமான மார்க்கெட்டிங் முறைகளைக் கையாண்டு தங்கள் நிறுவன பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.அதற்காக அவர்கள் பல விளம்பர யுக்திகளைக் கையாளுவதும் நமக்குத் தெரிந்ததுதான்.

அதே விளம்பர யுக்திகளைக் கையாள டிஜிட்டல் மீடியாக்களை பல்வேறு வகைகளில் பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக மாறிவிட்ட‌ இணையத்தில் சந்தைப்படுத்தும் இந்த விளம்பர நடைமுறைகள்தான் டிஜிட்டல் மார்கெட்டிங் என்பதாகும்.

இதன் மூலம் இவர்கள் தங்கள் நிறுவனத்தின் சிறப்புகள்,நிறுவனப் பொருட்களின் தரம்,விலை,தள்ளுபடி எல்லாவற்றினையும் வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக இடைத்தர இணையதளங்களை நாடுகிறார்கள்.

இந்த வலைத்தளங்கள் இவர்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கின்றன.இதனால் இருதரப்பினைரும் பலனடைய முடியும்.

நடைமுறைச் சந்தைப்படுத்துதலைவிட எளிதானதாகவும்,மலிவானதாகவும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஒரே நேரத்தில் சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஓர் சிற‌ந்த வழிமுறையாக மாறிவிட்டது.

டிஜிட்டல் மார்கெட்டிங்கில் சில வகைகள்.

1. DISPLAY(BANNER) ADVERTISING

அனேகமாக எல்லா வலைத்தலங்களிலும் இந்த பேனர் விளம்பர முறைகளைப் (GOOGLE ADSENSE,CHITIKA)பார்த்து இருப்பீர்கள்.

இவற்றில் முக்கியமானது GOOGLE ADSENSE.

பல தளங்களும்,வலைப் பூக்களும் இதற்கான அப்ரூவல் பெறுவதற்காக தங்கள் வலைத்தளங்களுக்கு பார்வையாளர்களைக் கொண்டு வர போட்டி போட்டு கவரும் விதத்தில் பலவிதமான கட்டுரைகள்,செய்திகளை வெளியிட்டு பிரபலபடுத்த முயல்கின்றனர்.

ஆனாலும் வரும் வாடிக்கையாளர்கள் இயற்கையான முறையில் வரவழைக்கப்பட வேண்டும் என்பதில் கூகுள் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை விதித்தே இவர்களுக்கு அப்ரூவல் வழங்குகிறது.


2.  SOCIAL MEDIA MARKETING (SMM)

சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.

இதற்காக FACEBOOK,TWITTER,YOUTUBEபோன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் நிறுவன வலைத்தளங்களை பிரபலப்படுத்த பல இடைத்தரக இணையதளங்களை நாடுகின்றன.

இவை இலவசமாகவும்,பணம் வழங்கியும் சந்தைப்படுத்த முயற்சிக்கின்றன.

உதாரணமாக நாம் ஆன்லைன் ஜாப்பில் கூட பல தளங்களில் ஃபேஸ்புக்கில் லைக் போட்டு (ADDMEFAST,LIKE4LIKE)சம்பாதித்து வருகிறோம்.இப்படி பார்வையாளர்களுக்கு பணம் வழங்குவதன் மூலம் இயற்கையாகவோ,செயற்கையாகவோ விளம்பரங்களை அவர்களைச் சென்றடைய வைக்கின்றன இந்த தளங்கள்.

3. SEARCH ENGINE OPTIMIZATION (SEO)

எந்த தேவையாக இருந்தாலும் இன்று அனைவரும் உடனடியாக சில வார்த்தைகளை டைப் செய்து தேடுவது GOOGLE,BING,YAHOOபோன்ற தேடு பொறிகளில்தான்.

அப்படி அவர்கள் தேடும் வார்த்தைகளை மையமாகக் கொண்டு விளம்பரங்களை முன்னிறுத்தும் மற்றொரு முறைதான் இந்த SEO.

இதற்காக பலவிதமான தேடு வார்த்தை (KEY WORDS)ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள்.

உதாரணமாக நீங்கள் "SAREE" எனத் தேடினால் அதற்கான தயாரிப்பு நிறுவன விளம்பரங்கள் (FLIPKART,AMAZON)முன்னிலையில் டிஸ்ப்ளே ஆவதற்காக பலதரப்பட்ட KEY WORDS களை உருவாக்கி இந்த இணையதளங்கள் செயல்படுகின்றன.   அந்த தளங்களின் ட்ராஃபிக் (பார்வையாளர்களின் எண்ணிக்கை)சம்பந்தப்பட்ட பொருட்கள்,கருத்துக்கள்,பாப்புலாரிட்டி ஆகியவற்றினைப் பொறுத்தே இவை முன்னிலையில் தோன்றுகின்றன. 

4. EMAIL MARKETING

பலருக்கும் பல்க் மெயில்களை அனுப்பி அதனை அவர்களைச் சென்றடைய வைக்கும் ம‌ற்றுமொரு முறைதான் இந்த EMAIL MARKETING.

சில தளங்கள் மெயில்களைப் படிப்பதற்கு பணமும் வழங்கி பார்வையாளர்களை ஊக்குவிக்கின்றன.

5. PAY PER CLICK.(PPC)

விளம்பரங்களைப் பார்ப்பதற்கு நேரடியாக பார்வையாளர்களுக்கு பணம் வழங்கியாவது அவர்களிடம் விளம்பரத்தினை,விற்பனைப் பொருட்களைக் கொண்டு சென்றடையச் செய்வதுதான் இந்த PAY PER CLICKமுறை.இதற்காக பல PTC (PAID TO CLICK)தளங்களும், GPT (GET PAID TO)தளங்களும் செயல்பட்டு வருவது நாம அறிந்த முறையே.இதன் மூலம் தங்கள் விற்பனைப் பொருட்களின் விவரங்கள் பார்வையாளர்களை உறுதியாகச் சென்றைடைந்துவிடும் என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு ஏற்படுகின்றன.

6. PAY PER DOWNLOAD.(PPD)

இதுவும் PAY PER CLICK போன்று விளம்பர வீடியோக்கள் மற்றும் MOBILE APPLICATIONகளை டவுன்லோட் செய்ய வைப்பதற்காக பணம் வழ‌ங்கி பார்வையாளர்களைச் சென்றடைய வைக்கும் ஓர் முறைதான். உடனடிப் பலன்களை இந்த முறைகள் (INSTANT FEEDBACK)அளிக்கின்றன.


7.  CONTENT MARKETING

எந்தவிதமான உள்ளடக்கங்களை (CONTENT),தகவல்களை பயனுள்ள தகவல்களை தங்கள் தளங்களில் முன்வைத்தால் தங்கள் பொருட்களுக்கான விளம்பரங்களை பார்வையாளர்களிடம் கொண்டு செல்லலாம்  என்பதே இங்கு மிக முக்கியமாகச் செயல்படுகிறது.(CONTENT IS KING).

8 .AFFILIATE MARKETING

நேரடியாக பார்வையாளர்களைக் கொண்டு வருபவர்களுக்கு ஊக்கத் தொகை வழ‌ங்குவதன் மூலம் உண்மையான பார்வையாளர்களைக் கொண்டுவரும் முறைதான இந்த AFFILIATE MARKETING.

நிறுவனங்களுக்கு நேரடிப்பலன்களை கொடுக்கும் முறை இது.

இதில் பார்வையாளர்கள் தங்கள் பரிந்துரைகள்,ரிவியூ(REVIEW),ARTICLE,FORUM WRITING ஆகியவற்றின் மூலம் மற்ற பார்வையாளர்களை அந்த நிறுவன தளங்களுக்கு கொண்டு வருவதோடு அவர்கள் மூலம் விற்பனையாகும் பொருட்களுக்குண்டான கமிஷனையும் பெறுகின்றனர். 

--------------

இப்படி பல வழிமுறைகளை இந்த நிறுவனங்கள் கையாளுவதோடு தாங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்காக செலவழித்த முதலீட்டின் மேல் வரும் வருமானம் (RETURN ON INVESTMENT),எந்த வழிமுறைகள்  அதிகமாக பலனைக் கொடுக்கின்றன என்பதையும் பல வழிமுறைகள்( GOOGLE ANALYTIC,WEB MASTER TOOLS) மூலம் ஆராய்ந்தே அடுத்த கட்ட சந்தைப்படுத்தலில் ஈடுபடுகின்றன. 

இந்த முறைகள் மூலம் யார் வேண்டுமானாலும் பணமீட்டலாம்.

தேவை சரியான வலைப் பூக்கள்,வலைத்தளங்கள்,வெப் டிசைன்,டொமைன்,எந்த பொருட்களை மார்கெட்டிங்க் செய்ய விரும்புகிறீகளோ அதற்கேற்ற உள்ளடக்கங்கள் என பல விஷயங்களில் கவனமாக இருந்தால் அதிகமான பார்வையாளர்களை (ட்ராஃபிக்)கொண்டு வருவதன் மூலம் எளிதாக டிஜிட்டல் மார்கெட்டிங்கில் ஜெயிக்கலாம்.

நிகழ்காலத்தில் பல மில்லியன் டாலர்களில் புரளும் இந்த தொழிலில் குறைந்த முதலீட்டிலேயே உங்கள் திறமையினை மட்டுமே அதிக மூலதனமாகக் கொண்டு நீங்களும் நிறையச் சம்பாதிக்கலாம்.

உங்கள் திறமைக்கேற்ற வழிமுறைகளை கையாளுங்கள்.வெற்றிபெறுங்கள்.வாழ்த்துக்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக