Pages

புதன், 16 ஜூலை, 2014

ஆன்லைன் ஜாப்ஸிற்கு ஏற்ற சிறந்த இணைய இணைப்பு(NET PLAN) எது?

ஆன்லைன் ஜாப்ஸிற்கு புதிதாக வருபவர்கள் பலருக்கும் ஏற்படும் மிகப்பெரிய விரக்தி இணையச் செலவு.ஆன்லைன் ஜாப்ப்பில் ஆரம்பத்தில் பலருக்கும் 1$ பார்ப்பதற்குள்ளாகவே 1ஜிபி அளவிற்கு நெட் விரயமாகிவிடுவது போன்ற அனுபவத்தினைப் பெற்றிருப்பார்கள்.சரியான நெட் பிளானைச் செலெக்ட் செய்து பிறகு வருமானத்தினை ஈட்டுவது என்பது பலருக்கும் விரக்தியளிக்கும் நேரத்தில் ஆன்லைன் ஜாப்பினை விட்டு காத தூரம் ஓடி விடுவார்கள்.இதுதான் நடைமுறை.ஆர்வம் உள்ள ஒரு சிலரே பல முயற்சிகளையும் தடைகளையும் தாண்டி தொடர் வெற்றி பெறுவார்கள்.அந்த வகையில் நாம் ஒருவருக்கொருவர் எந்த இணைய இணைப்பிணை பயன்படுத்தி வருகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வதன் மூலம் மற்ற நபர்களும் பல சிக்கன வழிகளை அறிந்து கொள்வார்கள்.



எப்படி பார்த்தாலும் ஆன்லைன் ஜாப்பிற்கு ஏற்றது அன்லிமிட்டெட் பிளான்தான்.அதுவும் 3ஜி இணைப்பில் அன்லிமிட்டெட் கூட அதிகம் 10ஜிபி தான் கிடைக்கும் அதுவும் மாத 1000 ரூபாய்க்குக் மேல் செலவாகிவிடும்.

அந்த வகையில் நான் பயன்படுத்தி வரும் நெட் பிளான்.

NAME :TATA PHOTAN

MONTHLY 3G UNLIMITED PLAN WITH 3.5MBPS SPEED

20GB WITH 30 DAYS VALIDITY= RS 999/ PER MONTH

Min Plan for 30 days validity = 1.5 GB/Rs255

மாதம் சாராசரியாக ஆன்லைன் ஜாப்பிற்கு மட்டும் 10ஜிபி ஆகிறது. ஆதலால் மிச்சமாகும் 10 ஜிபியுடன் அடுத்த மாதம் 30 நாள் வேலிடிட்டியிற்காக மட்டும் Rs255 for 30 days பிளானை இந்த மாதம் வேலிடிட்டி நாள் முடியும் அன்று ஏற்றிக் கொண்டால் தொடர்ந்து அடுத்த மாதம் மிச்சமுள்ள 10ஜிபி+ 1.5ஜிபி யும் சேர்த்து இரண்டு மாத செலவு 1255 ரூபாயிலும் மாத கணக்கில் மாதம் 650 ரூபாய்க்குள்ளும் சிக்கனமாக முடித்துக் கொள்ளலாம்.பிறகு மூன்றாம் மாதம் மீண்டும் 20ஜிபி பிளானை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

டாட்டா போட்டான் புதிதாக வாங்கும் போது மோடத்துடன் 10ஜிபி இலவசமாக கிடைக்கும்.செலவு ஆயிரம் ரூபாய்.புற நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த அளவு சிக்னல் கிடைக்கும் என்பதை வாங்கும் இடத்தில் விசாரித்துக் கொள்ளூங்கள்.ஸ்பீடு கிடைக்காவிட்டால் பலன் இல்லை.எனவே கவனம்.

புதிய இணைப்பிற்கு மாறுபவர்கள் பழைய கனெக்சனை நிறுத்திய பிறகு 24 மணி நேரம் கழித்துதான் புதிய இணைப்பில் வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.ஒரே நாளில் இரண்டு ஐபி மாறினால் பல கணக்குகள் சஸ்பெண்ட் ஆகிவிடும்.கவனம்.

நீங்களும் உங்கள் பிளானை வலை மன்றத்தில் பதிவிடலாம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.நன்றி. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக