PTC தளங்களின் மூலம் சம்பாதித்த பணத்தை எப்படி நம் வங்கிக் கணக்கிற்கு கொண்டு வருவது என்ற சந்தேகம் புதிதாக வருபவர்களுக்கு எழுவது இயல்பே? சம்பாதிக்கச் சொல்லித் தரும் நமக்கு அதனை பெறுவதனையும் சொல்வது நமது கடமை அல்லவா? வாருங்கள்.அறிந்து கொள்வோம்.
பேபால் கணக்கு என்றால் என்ன? அதை எப்படித்துவங்குவது, அதனால் என்னென்ன பயன்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?
பேபால் என்பது வங்கி போன்ற ஒரு நிறுவனம். நீங்கள் அதில் பணம் செலுத்தலாம், பணத்தை எடுக்கலாம். ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றலாம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அதன் மூலம் பணம் செலுத்தவும், விற்கும் பொருட்களுக்கு அல்லது செய்யும் சேவைகளுக்கு அதன் மூலம் பணத்தைப் பெறவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால் இணைத்தளத்தில் பணப் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு நிறுவனமே பேபால் ஆகும். பழைய காசோலைகளுக்கும் வரைவோலைகளுக்கும், பணவிடைகளுக்கும் மாற்றாக அமைந்த, டிஜிடல் முறையில் பணப்பட்டுவாடா செய்ய உதவும் இ-காமர்ஸ் நிறுவனம் இது.
பேபால் கணக்கில் நீங்கள் உங்கள் கடன் அட்டை, இணையப்பரிமாற்ற வசதி உள்ள வங்கிக் கணக்கு, உங்கள் பற்று அட்டை இவற்றின் மூலமாகவோ, குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் காசோலை மூலமாகவோ கூட பணத்தைச் செலுத்த முடியும். இவ்வாறே பேபாலில் உள்ள உங்கள் பணத்தை உங்கள் வங்கிக்கு மாற்றவும் வசதிகள் உள்ளன. பேபாலில் நாம் செய்யும் பரிவர்த்தனைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மார்ச் 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனமான இது 2002இல் இ-பேயின் துணை நிறுவனமாக (Subsidiary) மாறியது. 2008ஆம் ஆண்டு இணைத்தள மோசடிகளைத் (Internet Frauds) தடுக்கும் பொருட்டு ஃப்ராடு சயன்சஸ் என்னும் இஸ்ரேல் நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பேபால் இன்று ஏறத்தாழ 13 நாடுகளின் 190 சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 184 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பத்தொன்பது கரன்சியில் கணக்கு வைத்துக்கொள்ளும் செய்யும் வசதியைப் பெற்றுள்ளது. மேலும், எந்தக் கரன்சியிலும் மாற்றி நமது கணக்கில் சேர்க்கும் வசதியையும் இந்நிறுவனம் நமக்கு அளிக்கிறது. பாதுகாப்பாக பணப்பரிமாற்றம் செய்ய இந்நிறுவனம் சிறப்பான 'Security Key' முதலியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இன்று இணைத்தளங்களில் எளிதாகவும், விரைவாகவும் பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய உதவும் நிறுவனங்களில் பேபால் முதலிடம் வகிக்கிறது. சொல்லப் போனால், பேபாலுக்கு இணையான வேறு பணப்பரிமாற்றத் தளங்களே இல்லை எனலாம். இத்தகைய இணையற்ற சேவைக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகம் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளது.
பேபால் கணக்கினைத் துவங்குவது எப்படி? (How to open Paypal (Account)
பேபால் கணக்கைத் தொடங்க, வங்கிக்கணக்கு அல்லது கடன் அட்டை எண் இவை முதலில் தேவையில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியே போதும்.
முதலில் பேபால் முகப்புப்பக்கத்திற்குச்செல்லவும். (www.paypal.com) பிறகு புகுபதிகையைச் சொடுக்கவும்.(Click Signup). உங்கள் நாடு அல்லது மண்டலத்தை அதில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.(Select your country and region from the list.) உங்களுக்கு எந்த வகையான கணக்கு தேவையோ அதைத் தேர்ந்தெடுக்கவும். (Personal, Business or Premium). தனிநபர்களின் சாதாரணமான பணப்பரிமாற்றங்களுக்கு பர்சனல் கணக்கு போதுமானது. தனிநபர்கள் இணைத்தளத்தில் வர்த்தகம் செய்ய ப்ரீமியம் கணக்கு துவங்கவேண்டும். Business வகை நிறுவனங்களுக்கானது.
கணக்கு வகையைத் தேர்ந்தெடுத்த பின் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்பவும். உங்கள் தகவல்கள் சரியானதாகவும், உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள விவரங்களுடன் ஒத்திருப்பதும் முக்கியம். குறிப்பாக உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தவறின்றி இருத்தல் வேண்டும். நீங்கள் பிறருக்குப் பணம் செலுத்துபவராகவோ, அதிக அளவு தொகை பரிமாற்றம் செய்பவராகவோ இருந்தால் உங்கள் கடன் அட்டை விவரங்களைக் கொடுப்பது அவசியம்.
ஆக்டிவேட் செய்வது எப்படி?
அக்கவுண்ட் ஓபன் ஆனதும் வெரிஃபை பண்ண வேண்டும்...எப்படி..பேன்க் அக்கவுண்ட் ஆட் பண்ணியவுடன்..2 நாட்களில் உங்கள் அக்கவுண்டிற்றிக்கு சிரிய தொகை அனுப்பி வைப்பார்கள்...அந்த அமௌண்ட்டய் பேபல்லில் கொடுத்து அக்கவுண்டய் ஆக்டிவேட் பண்ண வேண்டும்..சுமாராக 1.10,2.20 ரூ என்ற தொகைகள் வந்திருக்கும்.அதனுடன் சில கோட் கொடுத்திருப்பார்கள்.அதனைச் சரியாக பேபாலில் கொடுத்து உறுதி செய்ய வேண்டும்.
பணம் எடுப்பது எப்படி?
பேபாலில் இருந்து பணம் எடுக்க மூன்று வழிகள் உள்ளன. உங்கள் நாட்டிற்கு ஏற்றவாறு வழிமுறைகள் மாறுபடலாம். உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்தால், பேபாலில் இருந்து பணம் எடுக்க விரும்பும் ஆணையைக் கொடுத்தால் (Withdraw Option) பணம் உங்கள் கணக்கிற்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.சில நாடுகளில் கடன் அட்டை மூலமாகவோ, பேபால் காசோலை (Cheque) அல்லது பேபால் பற்று அட்டை (Debit Card) மூலமாகவும் பணம் எடுக்க வசதியுள்ளது. மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா நடந்துவிடும். ஒரு பேபால் கணக்கில் இருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணத்தை மாற்றும் வசதி உண்டு. இதில் பெர்சனல் கணக்கு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் மிகவும் குறைவு.
பேபால் கணக்கின் பயன்கள்:
பேபால் கணக்கு நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக உலகில் எந்த மூலையில் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவோ, பணத்தைப் பெற்றுக்கொள்ளவோ உதவுகிறது. நீங்கள் இணைத்தளத்தின் மூலமாக ஏதேனும் வாங்கினால், பாதுகாப்பாகப் பணம் செலுத்த உதவுகிறது. உங்கள் கடன் அட்டை எண் (Credit Card Number), வங்கிக் கணக்கு எண் (Bank Account Number) இவற்றை விற்பனையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உங்கள் பரிமாற்றம் (Transaction) மிகுந்த பாதுகாப்பானதாக மாறுகிறது. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், உங்கள் கணக்கில் உள்ள தொகை இவை ரகசியமாக வைக்கப்படுகின்றன. மொத்தத்தில் சொல்லப்போனால் பேபால் பரிவர்த்தனைகள் உங்கள் கடன் அட்டைப் பரிமாற்றங்களை விட பாதுகாப்பானது, விரைவானது மற்றும் மலிவானது.
நியோபக்ஸ் ப்ரோபக்ஸில் RENTED REFERRAL BALANCE ல் பேபால் மூலமாக பணத்தைச் சேர்ப்பதற்கு க்ரெடி கார்டு கண்டிப்பாகத் தேவைபடும்.இந்திய டெபிட் கார்டுகளை பேபால் ஏற்றுக் கொள்வதில்லை.எனவே க்ரெட்டிட் கார்டு இல்லாதவர்கள் பேபால் போன்றே நம்பிக்கையான ஆன்லைன் விர்ச்சுவல் க்ரெடிட் கார்டை ENTROPAY மூலம் உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் நியோ,ப்ரோ தளங்களில் வாடகை வருமானத்திற்கான முதலீட்டைத் தொடரலாம்.அது பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
sir paypal oru help panna mudiumaa
பதிலளிநீக்கு