ஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/- :ஆதாரங்கள்(பதிவு 1)
ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும் இருப்பதற்குக் காரணம் பல ஏமாற்றுத் தளங்களிடம் பணத்தினை இழந்தவர்களின் மூலம் பெற்ற,கேட்ட அனுபவங்களாகத்தான் இருக்கும்.
இதில் மாற்றுக் கருத்தும் இல்லை.
காரணம் ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் 90களின் மத்தியிலேயே ந்மது தமிழ்நாட்டில் பலர் கடை போட ஆரம்பித்து விட்டார்கள்.DATA ENTRY,CAPTCHA ENTRY,SOFTWARE TYPING(PER PAGE Rs50),என பல வேலைகளை வழங்குவதாகக் கூறி ஆரம்ப கட்ட பயிற்சிக் கட்டணமாக 5000ரூ முதல் 10000ரூ வரை முதலிலேயே வசூலித்துவிடுவார்கள்.
பிறகுதான் அக்குயுரெசி போதவில்லை அது போதவில்லை இது போதவில்லை என அவர்கள் சொல்லும் பல காரணங்களால் கொடுத்த கட்டணத்தினைக் கூட சம்பாதிக்க முடியாமல் விட்டவர்கள் பலர்.
ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் ஆஃப்லைனில் இவர்கள் கடைவிரித்திருப்பதுதான் இது போன்ற ஏமாற்றங்களுக்கு காரணம்.
இவர்களை நம்பாமல் நாமே ஆன்லைனில் வாய்ப்புகளையும் தளங்களையும் தேடினால் மாதம் பத்தாயிரம் என்ன? அதற்கு மேலும் சம்பாதிக்கலாம் என்ற உண்மையான தேடுதலில்தான் உங்களையும் அழைத்துச் செல்கிறது நமது தளம். உங்களில் ஒருவராகத்தான் உங்களோடு ஆன்லைனில் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது நமது தளம்.
இங்கும் பல ஏமாற்றுத்தளங்களுக்கு மத்தியில்தான் நாமும் வண்டியினை ஓட்ட வேண்டியிருக்கிறது. இதுதான் நிதர்சனம்.இன்று பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் இரண்டு மாதத்தில் காணமல் போகலாம்.உங்கள் முதலீட்டினை முழுங்கும் தளங்கள் ஆயிரக்கணக்கில் காத்துக் கொண்டு இருக்கின்றன.பொறுக்கி எடுத்துதான் நாம் வேலை பார்க்க வேண்டும்.முதலீடே இல்லாமல் அல்லது சிறிய அளவு முதலீட்டில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றினையும் தாண்டி இங்கே ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
எந்த டெக்னிக்கல் அறிவும் இல்லாத நம்மால் என்ன சம்பாதிக்க முடியும் என நினைக்க வேண்டாம்.இங்கு அனுபவமும் பொறுமையும் திறமையும் உழைப்புமே தேவை.
இங்கு வந்தவுடனே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் என்பது பலருக்கு சாத்தியப்படாது.பல மாதங்கள் பகுதி நேரமாக முதலில் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.பேஸ்புக் டிவிட்டர் என வெட்டிப் பக்கங்களை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்லைன் ஜாப் தளங்களை அலசுங்கள்.உங்களுக்கும் ஆயிரம் வழிகள் புலப்படும்.
எனவே உங்கள் நிரந்தரமான வேலைகளை விட்டுவிட்டு இங்கே வாருங்கள் மாதம் 10000ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரையும் அழைக்கவில்லை.இங்கு 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிலிருந்து என் ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் வரை,குடும்பத் தலைவிகள் முதல் வலைதளங்கள் நடத்துபவர்கள்,ப்ரௌசிங் சென்டர்,மொபைல் ரீசார்ஜ் சென்டர நடத்துபவர்கள்,தற்காலிகமாக வேலையில்லா பட்டாதாரிகள் என அவரவர் சூழ்நிலைக்கும் திறமைக்கும் தகுந்தவாறு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் புதிய புதிய வாய்ப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இனிவரும் தலைமுறைகள் எல்லாம்ஆன்லைனிலேயே அத்தனை வசதிகளையும் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் பணம் சம்பாதிக்கு வாய்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே நம்பலாம்.
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.