இன்று நாம் கொடுத்த இரண்டு பரிந்துரைகளின் படி காலையிலேயே முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு அடைந்துவிட்டதனால் நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.
நமதுTORTOISE PORTFOLIO வின் பரிந்துரைப்படி காலையில் ரூ 1018ல் நமக்கு நல்ல வாங்கும் வாய்ப்பு இருந்ததால் அந்த விலையில் பங்குகளை வாங்கி முதல் இலக்கான ரூ 1027ல் பாதிப் பங்கு இலாபத்தினைப் புக் செய்திருந்தோம்.ரூ1026ல் ஒரு விற்கும் வாய்ப்பும்,பிறகு சற்று கீழிறங்கி மீண்டும் மேலேறி ரூ 1027ல் மீண்டும் ஒரு விற்கும் வாய்ப்பும் வந்ததால் இது இலாபத்தினை கண்டிப்பாகப் புக்கிங்க் செய்ய வேண்டிய இடம்.
இதனால் நமக்கு கிடைக்கும் நிகர இலாபம் 50X 9=ரூ 450/-
எனினும் 2 வது இலக்கினை அடையாமல் பங்கு விலை பின்னோக்கி சரிந்ததால் வாங்கிய விலையான ரூ 1018லேயே மீதி பங்குகளைக் கொடுத்து இலாப நஷ்டமின்றி வெளியேறிவிட்டோம்.
நமது பரிந்துரைப்படி ரிலையன்ஸ் பங்கு ரூ 1035ஐ அடையும் என்றாலும் டெலிவரி எடுக்க அதிக மார்ஜின் தொகை வேண்டும் என்பதால் கிடைத்த இலாபத்தில் இன்று வெளியேறிவிட்டோம்.அதன்படி இன்று அதிகபட்சமாக ரூ 1032 வரை சென்று வந்துள்ளது.
எனினும் தினசரி வர்த்தகப் பரிந்துரையின்படி இலக்குகள் முழுமையடையாமல் (ரூ 1029) மதியம் 3 மணியளவில் நஷ்டத்தடுப்பினையும் (ரூ 1014) உடைத்து கீழே சென்று பிறகுதான் முதல் இலக்கினை (ரூ 1029) அடைந்தது.
எனவே தினசரி வர்த்தகப் பரிந்துரைப்படி நமது நிகர நஷ்டம் 50X8=ரூ400 ஆகும்.
எனவேதான் கையில் கிடைக்கும் இலாபத்தினை அவ்வப்பொழுது பகுதி பகுதியாகப் புக் செய்து கொண்டு நஷ்டத்தடுப்பினை உயர்த்திக் கொள்ளச் சொல்கிறோம்.
சார்ட் பார்க்கத் தெரிந்தவர்கள்,அனுபவமுள்ளவர்கள் நாம் மேற்கூறிய முறையில் தேவையான இலாபத்தினை புக் செய்திருப்பார்கள் என்றாலும்.
நமது RABBIT PORTFOLIOவின் MAGIC TRICKS விதிமுறைகள் மற்றும் பரிந்துரைப்படி அது நஷ்டமே என்பதால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம்.
மொத்தத்தில் 2 PORTFOLIOக்கள் மூலம் இன்று பெற்ற நிகர இலாபம் ரூ 50 மட்டுமே.