TORTOISE PORTFOLIO வினைத் தொடர்ந்து ஆன்லைன் ஜாப் மெம்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆன்லைன் ஜாப்பின் தினசரிப் பணிகளில் ஒன்றாக தினசரிப் பங்கு வர்த்தத்தினையும் (DAY TRADING)ட்ரெயில் பார்க்கும் விதமாக நமது மேஜிக் ட்ரிக்ஸின் அடிப்படையில் நாளை முதல் RABBIT PORTFOLIO வும் தொடங்கப்படுகிறது.
எந்த சார்ட்டும் இல்லாமல் எல்லாப் பங்குகளுக்கும் எளிதாக இலக்குகள் எடுக்கும் மேஜிக் ட்ரிக்ஸ் நமது தளத்தில் DIAMOND CORNER ல் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி சுமார் 70% இலக்குகள் வெற்றிபெற வாய்ப்பும்,30% தோல்வியடையவும் வாய்ப்புகள் உள்ளன.
பங்குச் சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதினை விட இந்த ட்ரிக்ஸ் மூலம் மனக் கணக்காகவே கால்குலேட் செய்து இழப்புகளைத் தவிர்க்கலாம்.
இந்த RABBIT PORTFOLIO மூலம் முழுக்க முழுக்க NSE யில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் தினசரி வர்த்தகம் புரிய எளிய முறையில் இலக்குகளும் நஷ்டத்தடுப்புகளும் கொடுக்கப்படும்.
தினம் காலை 10 மணிக்கு நமது தளத்தினைப் பார்வையிடலாம்.
தினசரிப் பங்குகளின் வாங்கும் விலை,விற்கும் விலை,நஷ்டத்தடுப்பு ஆகியவை கொடுக்கப்படும்.
புதிய மெம்பர்கள் கொஞ்ச நாட்கள் RABBIT PORTFOLIOவினை ஃபாலோ செய்து அதன் பிறகே ட்ரேடிங்கில் ஈடுபடவும்.
தின்சரி வர்த்தகத்திற்கு என்று வாங்கும் பங்குகளை இலாப இலக்குகள்,நஷ்டத்தடுப்பில் விற்று வெளியேறிவிடுங்கள்.
அதனை மறுநாள் டெலிவரிக்கு என எடுத்துச் செல்லாதீர்கள்.
கோல்டன் மெம்பர்களுக்கு வழக்கம் போல DIAMOND CORNER லும் இது விளக்கங்களுடன் வெளியிடப்படும்.
எல்லா நாட்களும் கட்டாயம் பரிந்துரை வரும் என எதிர்பார்க்க வேண்டாம்.
சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பொறுத்து ஒன்று அல்லது
2 பங்குகளுக்கு பரிந்துரை வெளியிடப்படும்.
கூடவே NIFTY யின் தினசரி வர்த்தக இலக்குகளும் வெளியிடப்படும்.
அதில் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எச்சரிக்கை;
பங்கு வர்த்தகம் என்பது முதலீட்டு அபாயத்திற்கு உட்பட்டது.இதனால் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நமது பரிந்துரைகள் பொறுப்பாகாது என்றும், பரிந்துரைக்கும் இந்தப் பங்குகளில் நாமும் வர்த்தகம் செய்வோம் என எதிர்பார்க்க வேண்டாம் என்பதையும் புரிந்து செயல்படவும்.