Pages

திங்கள், 4 ஜனவரி, 2016

தங்கம்:2016ல் எப்படி இருக்கும்?கடந்த காலமும் கணிப்புகளும்.

நமது தளத்தில் DIAMOND CORNER என்ற பகுதியில் பங்குச் சந்தைப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளோம்.

பங்குச் சந்தையில் ட்ரேடிங் செய்பவர்களுக்கும்,ஆர்வமுள்ளவர்களுக்கும் இந்தப் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு கடந்த கால நமது கணிப்புகளும் அவற்றின் வெற்றிகளுமே ஆதாரங்கள்.

அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 19ல் "தங்கத்தினைப் பற்றிய ஓர் அதிர்ச்சிப் பதிவு" என்ற தலைப்பில் ஒரு சின்ன டெக்னிக் கொடுத்திருந்தோம்.

பதிவினைக் காண இங்கு செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2013/04/blog-post_19.html

இந்த டெக்னிக்கின் படி ஒவ்வொரு வருடமும் தங்கம் எந்தப் பாதையில் செல்லும் என்பதை ஜனவரி மாதமே தீர்மானிக்கிறது என்பதைச் சொல்லியிருந்தோம்.

அதன்படியே கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தங்கம் இறங்குமுகத்தில் செல்ல நாம் கொடுத்த டெக்னிக் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாக இருந்தது என்பதைப் பாருங்கள்.

அப்போது நாம் சொல்வதைக் கேட்க ஆளில்லை.

எனவேதான் பங்குச் சந்தைப் பதிவுகளில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் இப்போது நமது தளத்திற்கு தினம் 100 வாசகர்கள் வந்து போவதால் மீண்டும் இது போன்ற பயனுள்ள பதிவுகளையும்,பகுதிகளையும் ஆரம்பித்துள்ளோம்.


நாம் சொல்லிய டெக்னிக்கின்படி தங்கமானது 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் LOW/வினை (28625)உடைத்து கீழ் நோக்கிச் செல்ல ஆரம்பித்து பிறகு ஒரே இறங்குமுகமாகவே சென்றுள்ளது.அது கடைசி வரை நாம் சொன்ன நஷ்டத்தடுப்பான ஜனவரி மாத HIGH/யான 31468ஐ திரும்ப உடைக்கவேஇல்லை.

ஏப்ரல் 2014லிலேயே அது LOW வினை உடைத்து கீழிறங்கத் தொடங்கிவிட்டது.

அந்த நேரத்திலேயே தங்கத்தினை ஃப்யூச்சரில் விற்று வைத்து தொடர்ந்தவர்கள் இன்று வரை இலாபம் பார்த்திருக்கலாம்.

அல்லது அடகு வைத்த நகையினை விற்று கடன்களை அடைத்திருந்தால் இன்று அதற்கு கட்டி வந்த வட்டியும் மிச்சமாகியிருக்கும்.கடனும் அடைப்பட்டிருக்கும்.

சென்டிமென்ட்டாக ஏறும் ஏறும் என வாங்கி வைத்தவர்களுக்கு நிகர நஷ்டம்தான்.

இதுதான் 2015 ஜனவரி மாத சார்ட்டிலும் நடந்துள்ளது.

2015லும் ஜனவரி மாத LOW/யினை 26351 ஐ உடைத்த கரடியானது கடைசி வரை காளையினை எழும்ப விடவேயில்லை.அதாவது 2015 ஜனவரி மாத HIGH /யினை உடைக்கவே இல்லை.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நாம் சொன்ன உளவியல்படி நடந்திருந்தாலும் இது இப்படித்தான் நடக்க வாய்ப்புள்ளது என்பதை 2013 செப்டம்பர் மாத BEAR BAR/ஆனது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவித்திருப்பதனை படத்தில் காணலாம்.

அதாவது 2013 செப்டம்பர் மாத LOW/ஐ உடைத்து கரடியின் கை ஓங்க ஆரம்பிக்கும் போதே அந்த மாத HIGH/க்கும்(34450) LOW/(29277)விற்கும் இடைப்பட்ட உயரமான(வித்தியாசமான) சுமார் 5000 பாயிண்டுகள் அளவிற்கு அது அந்த மாத 29377/வான LOW/லிருந்து இறங்க ஆரம்பிக்கும் போது அதே 5000 பாயிண்டுகள் வரை கீழிறங்க வாய்ப்புள்ளது என்பதை டெக்னிக்கல் அனாலிசிஸ் காட்டிவிடுகிறது.

அதன்படியே அது 5000 பாயிண்ட்கள் குறைவாக ஜீலை 2015ல் 24450ஐ தொட்டு வந்துள்ளது.(H-34450-L-29300=5150-29300=24150)

இதுதான் நாம் சொல்லும் டெக்னிக்கும் டெக்னிக்கல் அனாலிஸிஸ்ம் ஆகும்.

இதே முறையில் 2016ல் தங்கம் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க நாம் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அதாவது இந்த ஜனவரி மாத HIGH/LOWவினையும் அது எப்போது கடக்கப்படுகிறது என்பதையும் பொறுத்து இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் கணித்தே இந்த வருடத்தின் இறுதிப் போக்கினைத் தீர்மானிக்க முடியும்.

அது வரை நமது பங்குச் சந்தைப் பயிற்சிகளைப் பெற்று நீங்களும் கணிக்கத் தொடங்கிவிடலாம்.வாழ்த்துக்கள்.

புரியாதவர்கள் உங்கள் பங்குச் சந்தை அலுவலக நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது முழுக்க முழுக்க நமது தளத்தின் சொந்தப் பதிவாகும்.

எங்கிருந்தும் COPY /PASTE செய்யப்படவில்லை.அதே போல இந்தப் பதிவினையும் COPY /PASTE/செய்ய யாருக்கு உரிமையில்லை.

சனி, 2 ஜனவரி, 2016

TORTOISE PORTFOLIO:2016:முதல் பங்குப் பரிந்துரை:BHARTI AIRTEL

பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.



http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.


1. BHARTI AIRTEL (NSE)



 
BUY ABOVE: 342
 (YOU CAN BUY NOW ON CURRENT RATE)

TARGET 1- 359   //   TARGET 2 -379

STOP LOSS- 323 


PAYPAL :போலி மெயில் அலெர்ட்


நமது பாதுகாப்பான ஆன்லைன் வங்கியான‌ பேபால் தளத்திலிருந்து அனுப்பவது போல ஒரு போலி மெயில் பேபால் வைத்திருப்போரின் மெயில் INBOX களுக்கு வருகிறது.

இது ஒரு போலியான மெயில் என்பதை அது வந்திருக்கும் முகவரியினை நன்கு கவனித்தாலே அறியலாம்.



மேலும் உங்கள் பேபால் கணக்கு முடக்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட லிங்க் மூலம் லாக் இன் ஆகவும் எனவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் சென்றால் பேபால் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு போலியான தளம் இருக்கும்.அதில் வெப் முகவரியும் போலியாக இருக்கும்.

இந்த லிங்க் மூலம் சென்று நீங்கள் லாக் இன் செய்தால் உங்கள் பேபால் கணக்கினை லாக் இன் செய்தால் உங்கள் கணக்கினை ஹேக் செய்துவிடுவார்கள்.





எனவே இது போன்ற மெயில்களைத் தவிர்த்து நேரடியாக பேபால் தளத்தின் மூலம் மட்டுமே எப்போதும் லாக் இன் ஆகவும்.

இது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் பொருந்தும்.

வெள்ளி, 1 ஜனவரி, 2016

2016 : முதலாவது சர்வே ஜாப் GIFT VOUCHER ஆதாரம் ரூ 400/‍-

2016ம் ஆண்டில் சர்வே ஜாப் மூலம் பெற்ற முதல் பேமெண்ட் ரூ 400/‍-க்கான‌ பண ஆதாரம் இது.

TOP 30 SURVEY தளங்களில் முக்கியமான தளத்திலிருந்து பெற்ற AMAZON GIFT VOUCHER இது.

----------------------------------------------------------------------------------------------------------------
சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.


சர்வே ஜாப் பயிற்சிகளோடு நமது தளத்தில் மாதம் 3000 ரூ முதல் 5000ரூ வரையிலான சர்வே ஜாப் வீடியோக்களை GOLDEN CORNER பகுதியில் அப்லோட் செய்துவருகிறோம்.

ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாத‌ம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

இந்தப் பணிகளை உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் ஆன்லைனுக்கு வரும் போதோ அலுவலகத்தில் இருந்தவாறோ கூட செய்து பகுதி நேரமாக பணமீட்டலாம்.ஆன்லைன் வேலைக்காக இன்னும் சற்று அதிக நேரத்தினை ஒதுக்குபவர்களாக இருந்தால் முதலீடின்றி மாதம் ரூ 5000 என்பது எளிதான இலக்கே.
-----------------------------------------------------------------------------------------------------------------------




HAPPY NEW YEAR 2016: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் மெம்பர்கள்,பார்வையாளர்கள் அனைவருக்கும் நமது தளத்தின் புதுவருட‌ நல்வாழ்த்துக்கள்.
இந்த 2016ஆம் ஆண்டில் ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் உங்கள் வருமானமும்,வசதிகளும் அதிகரிக்கவும் வாழ்த்துகிறோம்.



இன்று முதல் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸின் அடுத்த அங்கமான பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான DIAMOND CORNER பகுதி ஆரம்பமாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.